சிவஶ்ரீ. பரமேஸ்வரக் குருக்கள் மனோகர குருக்கள்

(வல்வெட்டிதுறை ஸ்ரீ வாலாம்பிகா சமேத வைத்தியநாத சுவாமி ஆலய பிரதம குரு)

பரமேஸ்வரக் குருக்கள் மனோகர குருக்கள்

தோற்றம்: 31 மார்ச் 1952 - மறைவு: 12 ஜூன் 2025

யாழ். கோப்பாயைப் பூர்வீகமாகவும், வல்வெட்டித்துறை, கல்வியங்காடு ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்ட சிவஸ்ரீ. பரமேஸ்வரக் குருக்கள் மனோகர குருக்கள் அவர்கள் 12-06-025 வியாழக்கிழமை  சிவபதம் அடைந்தார்.  

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரக்குருக்கள் (வல்வெட்டித்துறை) - தாட்ஷாயணி அம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரரும், சோமசுந்தர ஐயர் (சித்தங்கேணி) - சரஸ்வதி அம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

ஸ்ரீமதி. கௌரிபாலா அவர்களின் கணவரும்,

மலரகித சர்மா, காலஞ்சென்றவர்களான மலர்மங்கை, மங்கையற்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவஸ்ரீ. பிரதாபக்குருக்கள், பராபரக் குருக்கள், பிரசன்னாரூபக்குருக்கள், பத்மரூபி,  ஸ்ரீமதி. ஷர்மினி, நிரூபக்குருக்கள், நிரோஜனா ஆகியோரின் தந்தையும்,

பிரியங்கா, காயத்ரி, பிரியதர்ஷினி, கௌரிசங்கர சர்மா, ஜெஹானு, பிரசாந்தக்குருக்கள் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சாக்‌ஷினி, பிரித்வின் சர்மா, நாதரூபிணி, ப்ரணீஷா, பிரஜீத் சர்மா, ஹரித்ரன் சர்மா, மனோராஜ் சர்மா, சந்தோஸ் சர்மா, சந்தீப் சர்மா, மானஷன் சர்மா, மாதுஷன் ரீர்மா, ப்ரத்யக்‌ஷன் சர்மா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்  ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-06-2025 வௌ்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் G.P.S. விளையாட்டரங்க வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"இறைபதம் அடைந்த பிரம்மஸ்ரீ மனோகரக் குருக்கள் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல வைத்தீஸ்வரப் பெருமானைப் பிரார்த்திப்ப தோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது அன்பு மனைவி. பிள்ளைகள். மருமக்கள். பேரப்பிள்ளைகள் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அன்னாரது பிரிவுத் துயரில் ஆழ்ந்திருக்கும் வல்வெட்டித்துறை மக்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். "
- Nadarajah Anantharaj (Sri Lanka, 13/06/2025 13:12)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/06/2025 04:00)