திருமதி. பரமேஸ்வரி கனகசபாபதி

பரமேஸ்வரி கனகசபாபதி

தோற்றம்: 06 ஆகஸ்ட் 1941 - மறைவு: 29 ஆகஸ்ட் 2025

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், அல்வாய் தெற்கு மற்றும் கொழும்பு - வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி கனகசபாபதி அவர்கள் 29-08-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோணப்பர் கதிர்கேசு - செல்லாச்சி தம்பதியினரின் பாசமிகு மகளும்,

திரு. திருமதி. பெரியதம்பி தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற கனகசபாபதி (ஓய்வுபெற்ற எழுதுவினைஞர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

பிறேமளாவின் அன்புத் தாயாரும்,

குகன் (Scychells) இன் அன்பு மாமியாரும்,

அக்வுனா (BIG_M / TAN Engineers Pvt Ltd - Colombo) இன் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் (மலேசியா), இராசம்மாவேலுப்பிள்ளை (அல்வாய்), குலசிங்கம் (மலேசியா), நவரட்ணம் (மலேசியா), இராஜசிங்கம் (மலேசியா), நடராஜா (சிங்கப்பூர்), பரமசிவம் (மலேசியா), சபாரட்ணம் (மலேசியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற இரத்தினசபாபதி (நீர்வேலி), அமிர்தலிங்கம் (நீர்வேலி), சத்தியலக்‌ஷ்மி கோணேஸ்வரன் (நீர்வேலி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-09-2025 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/09/2025 04:00)