Mrs. Parameshwary Thangharajah

Parameshwary Thangharajah

Date of Birth: 10 October 1930 - Deceased: 31 December 2025

யாழ். இணுவில் தெற்கு, இணுவிலைப் பிறப்பிடமாகவும், இணுவில், கனடா - Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி தங்கராஜா அவர்கள் 31-12-2025 புதன்கிழமை அன்று அதிகாலை வைகுந்த ஏகாதசி தினத்தில் சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - ஆனந்தியார் தம்பதியினரின் கனிஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

தங்கராஜா (Chief Shroff, Central Bank of Ceylon) அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீஸ்கந்தராஜா (Electrical Superintendent, Ceylon Electricity Board), ஸ்ரீகல்யாணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

லீலாவதி, முத்துலிங்கம் (Electrical Superintendent, Ceylon Electricity Board; Above the Best Driving School) அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, இரத்தினம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சபாஆனந்தர், அம்பலவாணர், துரைசிங்கம், தங்கம்மா, நடராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

கிரிசாந்தன்- நிருஷா, நிரோஷன்- சுபேஷா, தினேஷா- வினோத், தனஸ்ரீ- ஸ்ரீநிகேதன், ஜீவிதன் – ஜனனி, நிருஜா- ரமணன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அகிலேஷ், அலொக்‌ஷா, அகாரன், அயன், அயில் ராஜேஷ், இயல் கல்யாணி, ஐரா, ஆரன், அகன், அகாயன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 05-01-2026 திங்கட்கிழமை காலை 8:30 - 9:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைற்று, நண்பகல் 12:00 மணியளவில் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/01/2026 00:00)