Mrs. Parameswararasa Parameswary
Date of Birth: 04 January 1942 - Deceased: 07 March 2026
மலேசியாவை பிறப்பிடமாகவும், தேரியந்தோட்டம் சுழிபுரம் மத்தி, உரும்பிராயை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பரமேஸ்வரராசா பரமேஸ்வரி அவர்கள் 07-03-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மலாயன் பென்சனியர் நவரத்தினம் - வள்ளியம்மை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு - ஆச்சிமுத்து தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரராசா (ஓய்வூதியர், புகையிரத திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிவநேசன், ஞானேஸ்வரி ஆகியோரின் சகோதரியும்,
அருந்தவம் (ஆசிரிய ஆலோசகர் வலிகாம கல்வி வலயம்), காலஞ்சென்ற யோகரூபகுமார், யசோதா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நிரூபா (ஆசிரியை - யாழ். அச்சுவேலி மத்திய கல்லூரி), சுமங்கலி (இலண்டன்), கேமவண்ணன் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,
மதுரா (விஞ்ஞான பீடம், யாழ் பல்கலைக்கழகம்), ருபிகா (மாணவி - யாழ். வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை), அபிரா (இலண்டன்), சாரா (சுவிஸ்), பரா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-03-2026 செவ்வாய்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரது உரும்பிராய் இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் உரும்பிராய் இளங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
