Mrs. Parameswary Navarathinarajah
Date of Birth: 19 July 1953 - Deceased: 08 February 2025
யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி வடக்கைக் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி நவரத்தினராஜா அவர்கள் 08-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம் - பொன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும், இராசையா - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நவரத்தினராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
சோபனா, பிரதீபன் (நியுசிலாந்து), மதுரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகலிங்கம் (அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கம்), ஜெயசீலன் (நியுசிலாந்து), தர்சனன் (நியுசிலாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சந்திராதேவி அவர்களின் பாசமிகு சகோதரியும்,
விவேதிகா (கொமர்ஷல் வங்கி - சாவகச்சேரி), கபிஸ்னா (யாழ். இந்து மகளிர் கல்லூரி), ஷாய்சரன் (யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி), ஆகாஷ் (நியுசிலாந்து), ஆருஷா (நியுசிலாந்து), அபிநவ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
இராசதுரை, கனகரஞ்சிதம், காலஞ்சென்ற சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-02-2025 செவ்வாய்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் புகழுடல் நீர்வேலி சீயக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
