திருமதி பரமேஸ்வரி சிவகுமாரன் (செல்லம்)
தோற்றம்: 31 ஜூலை 1929 - மறைவு: 09 ஏப்ரல் 2020
மலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், யாழ். சுன்னாகம் , அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சிவகுமாரன் அவர்கள் 09-04-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற கனகசிவநாயகம், சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவகுமாரன்(ஸ்கந்தவரோதய கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
சத்தியமூர்த்தி(மூர்த்தி- அவுஸ்திரேலியா), சத்தியவதனி(விசா- அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுந்தரலட்சுமி(லக்ஷ்மி- அவுஸ்திரேலியா), விக்னேஸ்வரன்(திரவியம்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
புவனேஸ்வரி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான ரட்னசபாபதி, மகேஸ்வரி,
Dr. சரவணபவன்(பவன்) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
Dr. ரட்ணதேவி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான சிவலோகம், தெய்வநாயகி(தங்கம்), தம்பிராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரசாந்தி(அவுஸ்திரேலியா), நிலாந்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய நாட்டு விதிமுறைகளை கருத்தில் கொண்டு அன்னாரின் இறுதிச்சடங்குகள் தனிப்பட்ட முறையில் குடும்பத்தினருடன் மட்டுமே நடைபெறுமென்று ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
