திருமதி. பரமேஸ்வரி சிவானந்தநாயகம்

(இளைப்பாறிய இரசாயனவியல் ஆசரியை)

பரமேஸ்வரி சிவானந்தநாயகம்

மறைவு: 15 மே 2024

யாழ். கலட்டி (குருக்கள் பகுதி) கரணவாய் கிழக்கு, கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கல்முனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பரமேஸ்வரி சிவானந்தநாயகம் அவர்கள் 15-05-2024 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா - பர்வதம் (செட்டியார் பகுதி - வதிரி), வேலுப்பிள்ளை - லக்‌ஷ்மி (கரவெட்டி கிழக்கு) ஆகியோரின் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் - பத்தினிப்பிள்ளை (தலைமை ஆசிரியர்கள்) தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை (விரிவுரையாளர் - கோப்பாய் ஆசிரிய கலாசாலை) - செல்லம்மா (அல்வாய்) தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற சிவானந்தநாயகம் (கணித விரிவுரையாளர் - பலாலி ஆசிரிய கலாசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிவகுமார், காஞ்சனா, பிறேமகுமார், ரஞ்சனா ஆகியோரின் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராஜதுரை, Dr. வைத்திலிங்கம் மற்றும் யோகேஸ்வரி ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான குலதிலகமாணிக்கநாயகம், சபாநாயகம், கணேசநாயகம், பத்மநாயகம், செல்வநாயகம் மற்றும் பரமேஸ்வரதேவி, மகேந்திரநாயகம், மகேஸ்வரதேவி, பரமேஸ்வரி, Dr. சுந்தரமூர்த்தி ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற சிவஈஸ்வரி, மகேஸ்வரி, காலஞ்சென்ற சிவராஜா, இராசம்மா, தில்லைநாதன் ஆகியோரின் சகலியும்,

சுகந்தி, வசந்தி, துஷ்யந்தி, ஷகிலா, கணேஸ், ஷாமினி, மனோகரன், ஜெயகரன் ஆகியோரின் பெரியம்மாவும்,

ரகுராஜ், ரவிராஜ், ரங்கன்ராஜ், தில்லைராஜ் ஆகியோரின் சின்னம்மாவும்,

பத்மினி, பாமினி, கபிலன், சுரேஸ், ரமேஸ், நிரேஸ், வதனா, ரூபன் ஆகியோரின் மாமியாரும்,

லக்‌ஷ்மன், கிருஷ்ணன், ஜெயன், அரன், பிரிட்டிக்கா, லக்‌ஷன், கரிசன், கவின், கணன், ரித்திக்கா, ராகினி, எலினா, தேவன், டிலன், சாமுவேல், எமிலி, புளோரன்ஸ், வர்ணிக்கா, நீஷா, எஸ்டின் ஆகியோரின் பேத்தியும்,

சோனியாவின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 19-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 2.00 மணியவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/05/2024 04:00)