திருமதி. பரமேஸ்வரி சுப்ரமணியம்

பரமேஸ்வரி சுப்ரமணியம்

தோற்றம்: 30 மார்ச் 1942 - மறைவு: 25 நவம்பர் 2024

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், Ajax-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி சுப்ரமணியம் அவர்கள் 25-11-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லாச்சி-முத்தையா தம்பதியினரின் அன்பு மகளும், 

காலஞ்சென்ற சுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

இந்திரா, இளங்கோ, சுமதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுபாஜினி, இந்தி, தெய்வேந்திரராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரீனா, தீமொத்தி, அபிகேல், நடிறா, பிரியா, சபின், சஜான், அரவிந்த், செலின், கேவன், பெனெக்கெல் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜூரியல், ஜாரி ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

சுந்தரலிங்கம், இராசலிங்கம், கனகலிங்கம், காலஞ்சென்ற அன்னலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராசலட்சுமி, நிர்மலாதேவி, மகேஸ்வரி, கிருஸ்ணவடிவு ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-11-2024 சனிக்கிழமை அன்று மாலை 5.00-9.00 மணி வரையும், 01-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00-11.30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து பிற்பகல் 2.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/11/2024 05:00)