Mrs. Parameswary Thanikasalam

Parameswary Thanikasalam

Deceased: 06 July 2025

யாழ்.கரவெட்டி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி தணிகாசலம் அவர்கள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை தனது 96வது வயதில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற லயன் தணிகாசலம் (ஓய்வு நிலை கணக்காளர், கரவெட்டி விக்னேஸ்வரக் கல்லூரி பழைய மாணவர் சங்க ஸ்தாபக தலைவர்) அவர்களின் துணைவியாரும்,

நிர்மலா, சுசீலா (ஓய்வுபெற்ற ஆசிரியை - விக்னேஸ்வரக் கல்லூரி), தயாபரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

லோகநாதன், கிருஷ்ணதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுஜீவன், நிரோஷா, மயூரன், மாதங்கி, சரண்யா, உதயசங்கர் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற பாக்கியம் ராமலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

சாந்தினி, குமுதினி, காலஞ்சென்ற சிவகுமார் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-07-2025 திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் நாவலர் மடத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, காலை 9:30 மணியளவில் திருவுடல் எள்ளன்குளம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/07/2025 04:00)