திருமதி. பரமேஸ்வரி வேலாயுதம்பிள்ளை
தோற்றம்: 12 மே 1941 - மறைவு: 03 டிசம்பர் 2025
யாழ். வடமராட்சி பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி வேலாயுதம்பிள்ளை அவர்கள் 03-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் - பார்பதிப்பிள்ளை தம்பதியினரின் இளைய மகளும், கந்தவனம் - சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Dr. வேலாயுதம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
பகீரதன், தயாபரன், ஜீவமதி, ரூபமதி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
காலஞ்சென்ற விக்னேஸ்வரன், சுதர்சினி, துசாந்தி, அன்புக்குமார், ஜயந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ரட்ணேஸ்வரன், சிவகாமிப்பிள்ளை மற்றும், சிவபாக்கியம் ஆகியோரின் ஆருயிர் சகோதரியும்,
றஞ்சிதா, றஞ்சனி, பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
சாம்பவி, மிருதி, சங்கினி, கரிஸ், ஜஷ்மி, நிவாசினி, கேசினி, லவிஷ், ஹஜேன், மாதுரி, தேனுஜன், மாதங்கி ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
