Mrs. Parameswary Veluppillai

Parameswary Veluppillai

Deceased: 03 July 2025

யாழ். புங்குடுதீவு பெருங்காடு மத்தியை பிறப்பிடமாகவும்,  யாழ். கச்சேரியடி நல்லூர் வீதியை வாழ்விடமாகவும், கனடா - மார்க்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி வேலுப்பிள்ளை அவர்கள்  03-07-2025  வியாழக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - சின்னம்மா தம்பதியினரின் அருமை மகளாரும்,

காலஞ்சென்றவர்களான திரு.திருமதி.கார்த்திகேசு தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை (முத்துவேலு) அவர்களின் அருமை மனைவியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமைஅன்று முற்பகல் 10:00 - 2:30 மணி வரையும், Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் மாலை 4:30 மணியளவில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/07/2025 04:00)