திருமதி. பரராஜசேகரம் ஞானாதேவி

பரராஜசேகரம் ஞானாதேவி

மறைவு: 12 அக்டோபர் 2025

யாழ். ஊரெழுவை பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரராஜசேகரம் ஞானாதேவி அவர்கள் 12-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விநாசித்தம்பி - இலட்சுமி  தம்பதியினரின் அன்பு மகளும்,

சந்திரசேகரம் (விசுவமடு), இந்திராணி (கனடா), குலசேகரம் (கனடா), ராஜசேகரம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நமசிவாயம் பரராஜசேகரம் (இளைப்பாறிய வரி மதிப்பாளரர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சத்திய வாணி (கனடா), சத்தியகாந்தன் (Botswana) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுதன் (கனடா), அபிராமி (Botswana) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஸ்வின், அஜந், அபூர்வா, பிருத்வி ஆகியோரின் ஆருயிர் பேத்தியுமாவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 - 10.00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384, Finley Ave) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.
 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/10/2025 05:13)