Mrs. Pararajasingam Hajinakala

Pararajasingam Hajinakala

Date of Birth: 19 May 1974 - Deceased: 10 October 2025

யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதிபரராஜசிங்கம் ஹஜினாகலா அவர்கள் 10-10-2025 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் - மங்கையர்க்கரசி தம்பதியினரின் அன்பு மகளும், 

புஸ்பசாமி - இராசேஸ்வரி தம்பதியினரின் அருமை மருமகளும்,

புஸ்பசாமி பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஹயேந்த், ஹரேந்த் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாபுறாஜ் சித்திரவேல் (பாபு - சுவிஸ்), ஜஜிகலா (சசி - கனடா), லிவறாஜ் (கோபு), ஹவிறாஜ் (கவி), விஜயலட்சுமி, காலஞ்சென்ற சதாரூபலட்சுமி, சாந்தரூபலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பத்மநாதன், காலஞ்சென்ற பரஞ்சோதி, நாகேஸ்வரி, விவேகநாதன், பாஸ்கரன், தயாநிதி, கலாநிதி, பரமேஸ், கோகிலவதனா, கோகிலவாணி, றஜீவன், கேமரூபி (சுவிஸ்), இரமணேஸ்வரன் (கனடா) நிலானி, பாலஜீத்தா, பாலரயன், சிவரயன், சிவகயன், ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லினியா, சயன், லனுஜா ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

சிந்துயா, ஹிசாந்த், விற்ரேஷ், அகழ்யா, அகத்தியா, விஷ்ருதி, விஷ்ருதா ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08:30 மணி முதல் முற்பகல் 10:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலை (2B Elvitigala  Mawatha, Borella, Colombo-08) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து நண்பகல் 12:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 02:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/10/2025 02:10)