திருமதி. பராசக்தி பரமேஸ்வரன்

பராசக்தி பரமேஸ்வரன்

தோற்றம்: 16 ஆகஸ்ட் 1930 - மறைவு: 03 ஜனவரி 2024

யாழ் யூனியன் கல்லூரி பழைய மாணவியும், எமது கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியருமான பராசக்தி பரமேஸ்வரன் அவர்கள், தனது 94 ம் வயதில், 03.01.2024 செவ்வாய்க்கிழமை அன்று மெல்பேன்-அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.

எமது கல்லூரியில் கற்பித்த காலத்தில் விடுமுறை தினங்களிலும் மாணவர்களை கல்லூரிக்கு அழைத்து, மேலதிகமான பல வகுப்புக்களை இலவசமாக, சேவையாகச் செய்தவர், அமரர் பராசக்தி பரமேஸ்வரன் அவர்கள்  எப்போதும் மிகவும் கண்டிப்பாக இருந்தாலும், தனது மாணவர் ஒவ்வொருவரையும் தனித்தனியாக ஊக்கப்படுத்தும் அன்பான ஆசிரியராக விளங்கியவர்.
 
6ம் வகுப்பில் இருந்து 10 ம் வகுப்புவரை நீண்டகாலமாக எமது வகுப்பின் சமூகக்கல்வி ஆசிரியராக சேவை ஆற்றிய, ஆசிரியரின் ஆண்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
 
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், முல்லாத்தனை - தெல்லிப்பழை, மெல்பேர்ண் - அவுஸ்திரேலியாவை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட அன்னார், காலஞ்சென்ற முல்லாத்தனை- தெல்லிப்பழையை சேர்ந்த திரு திருமதி. சுப்பிரமணியம், காமாட்சிப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு புதல்வியும்,
 
திரு. பரமேஸ்வரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
ராகினி நித்தியானந்தன் (கெளரி – Melbourne), தயானந்தறூபி ஶ்ரீறீதரனின், (சாந்தி - Sydney) ஆகியோரின் பாசமிகு தாயாரும், இருவரும் எமது கல்லூரியின் பழைய மாணவிகள்.
 
(செல்வத்துரை நித்தியானந்தன், Melbourne) நடறாஜா ஶ்ரீறீதரன் (Sydney) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
 
நிஷானி நித்தியானந்தன் நிவாஷான் நித்தியானந்தன், சிறிஜனனி ஶ்ரீறீதரன், பிறுந்தவாணி ஶ்ரீறீதரன், ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவுமாவார்.
 
தயவுசெய்து இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
 
தயவுசெய்து இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
 
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், யூனியன் கல்லூரிச் சமூகம் சார்பாகவும், எமது குடும்பம் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
 
பார்வைக்கு:-
 
Monday, 8 January 2024   9:00 AM - 11:30 AM
Bunurong Memorial Park,
790 Frankston - Dandenong Rd,
Dandenong South VIC 3175,
Australia.
 
Service online via:
https:// smct.org.au/view/899677569

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/01/2024 08:31)