Mrs. Partheepan Lingeswary

Partheepan Lingeswary

Date of Birth: 24 January 1976 - Deceased: 02 June 2025

யாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் - Basel City, Breitenbach ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பார்த்தீபன் லிங்கேஸ்வரி அவர்கள் 02-06-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சக்திவேல் - பூபதியம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற பரம்சோதி - இந்திராதேவி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

பார்த்தீபன் அவர்களின் அன்பு மனைவியும்,

தீபிகா, லாகவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவராஜா (வவுனியா), செல்வராணி (வவுனியா), செல்வமலர் (சுவிஸ்), தவராசா (சுவிஸ்), செல்வரதி (சுவிஸ்), செல்வரஞ்சிதம் (வேலணை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஹேமலதா (வவுனியா), காலஞ்சென்ற ராமநாதன், இராசரத்தினம் (சுவிஸ்), சாந்தினி (சுவிஸ்), காலஞ்சென்ற தவராசசிங்கம் மற்றும் நாகதீபன் (வேலணை), காண்டீபன் (புளியங்கூடல்), பிரதீபன் (புளியங்கூடல்), ஆதீபன் (கனடா), குணதீபன் (யாழ்ப்பாணம்), மகாதீபன் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுகந்தினி (புளியங்கூடல்), சிந்துஜா (புளியங்கூடல்), லவப்பிரியா (கனடா), தற்பரா (யாழ்ப்பாணம்), தர்ஷா (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்  05-06-2025 வெள்ளிக்கிழமை முதல் 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை வரை பிற்பகல் 2:00 - 6:00 மணி வரை Friedhof Breitenbach (Bodenackerstrasse 3/1, 4226 Breitenbach, Switzerland) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 16-06-2025 திங்கட்கிழமை காலை 8:00 - 11:00 மணி வரை Hörnli Cemetery (Friedhof am Hörnli, Hörnliallee 70, 4125 Riehen, Switzerland) இறுதிக்கிரியைகள் நடைபெறும். 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/06/2025 04:00)