திரு. பார்த்தீபன் பரராஜசிங்கம்
(Finance Manager - Janatha Steels (Pvt) Ltd)
தோற்றம்: 02 மே 1968 - மறைவு: 29 டிசம்பர் 2025
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், இல-22,5/1, Aurbun Side, தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பார்த்தீபன் பரராஜசிங்கம் அவர்கள் 29-12-2025 திங்கட்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பரராஜசிங்கம் - புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிவகுமாரன் - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கலாயினி (ஆசிரியர் - பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்சயனின் (மாணவர் - க.பொ.த உயர்தரம் 2025 ரோயல் கல்லூரி) பாசமிகு தந்தையும்,
பாலமோகன் (இலண்டன்), பாஸ்கரன் (இலண்டன்) ஆகியோரி்ன் அன்புச் சகோதரனும்,
தயாநிதி (ஓய்வுபெற்ற ஆசிரியை), Dr. ரமேஷ்குமார் (தேசிய வைத்தியசாலை, கொழும்பு), மனோன்மணி (இலண்டன்), உமகிரி (இலண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,
சாகித்தியா, அபிநயா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-12-2025 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.30 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
