Mrs. Parvathipillai Ramanathan

Parvathipillai Ramanathan

Date of Birth: 28 November 1930 - Deceased: 31 July 2026

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா - Totonto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பார்வதிப்பிள்ளை இராமநாதன் அவர்கள் 31-07-2026 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதபிள்ளை - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான யாதவராயர் - பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராமநாதன் அவர்களின் பாசமிகு துணைவியும்,

காலஞ்சென்றவர்களான நாகமுத்து, யாதவராயர், மங்களம், மருதையினார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, மனோன்மணி, அம்பலவாணர் மற்றும் கமலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற கலாநிதி, கலாதேவி, கலாரஞ்சன் மற்றும் கலாநேசன், கலாரூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கொனி, ஜெகநாதன், நான்சி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

டறன், டீன், டானி, சார்லற், கல்யாண்குமார், நிரோஷினி, இயன், நிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஏவா, எதன், புரூக், கேறா, மியா, லஷாறோ, கெய்றோ ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-08-2026 சனிக்கிழமை அன்று முற்பகல் 11:00 - 12:00 மணி வரை  Home 4880, Solina Road, Carlington, Canada) எனும் முகவரியிலும், 09-08-2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 10-08-2026 திங்கட்கிழமை காலை 8:00 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

நேசன் (மகன்):- +44 748 383 6719
ரூபன் (மகன்):- +1 416 834 6130
மதி (பெறாமகன்):- +1 416 892 0891
நிரோ (பேத்தி):- +1 416 992 2999
சபா (பெறாமகன்):- +94 77 476 3067
கல்யாண் (பேரன்):- +91 979 090 7979

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/08/2026 00:00)