திருமதி. பார்வதி சுப்பிரமணியம்
தோற்றம்: 05 ஜனவரி 1937 - மறைவு: 02 மார்ச் 2025
யாழ். கரவெட்டி புதுத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கண்டி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பார்வதி சுப்பிரமணியம் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு வாத்தியார்- இலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மகளும், சாவகச்சேரியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மாணிக்கம் - முத்தாச்சி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
Dr. சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
வித்தியானந்தன் (அமெரிக்கா), அருள்நிதி (அவுஸ்திரேலியா), தயாநிதி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வீரவாகு, விக்கினேஸ்வரன், பாலசுப்பிரமணியம், கணேசன், சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாந்தி (அமெரிக்கா), பராபரன் (அவுஸ்திரேலியா), செல்வகுமரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரகுபரன், அக்ஷாரா, அருணன், அபிநயா, அக்ஷயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் புகழுடல் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
முகவரி:-
கண்டி வீதி, சாவகச்சேரி,
(வாகன புகை பரிசோதனை நிலையத்திற்கு முன்பாக)
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
