திரு. பசுபதி சந்திரசேகரம்

(ஓய்வு பெற்ற ஆசிரியர் - யா/கைதடி நவீல்ட் செவிப்புலன், விழிப்புலன் இழந்தோர் பாடசாலை)

பசுபதி சந்திரசேகரம்

தோற்றம்: 09 ஏப்ரல் 1941 - மறைவு: 19 ஜனவரி 2025

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், நுணாவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பசுபதி சந்திரசேகரம் அவர்கள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதி - அன்னா தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு - பராசக்தி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

விக்கினேஸ்வரி (ஓய்வு நிலை ஆசிரியை - சாவகச்சேரி இந்து கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,

இராமசந்திரன், லீலாவதி ஆகியோரின் அன்பு சகோதரனும்,

கபிலன் (பிரித்தானியா), மிதிலன் (அவுஸ்திரேலியா), சகிலா (ஆசிரியை - யா/சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை), சஞ்சுகன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு தந்தையும்,

வித்தியா (பிரித்தானியா), அலிசன் (அவுஸ்திரேலியா), வலன்ரைன் தினேஸ் (தொழில்நுட்பவியல் கல்லூரி-கொக்குவில்), அனுசியா (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிறிஸ்ரி கவின், காவியா, கிருத்திக் (பிரித்தானியா), கிரிசன் (பிரித்தானியா), சார்ல்ட் தமிழினி (அவுஸ்திரேலியா), கேசன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு பேரனும்,

கணேஸ்வரி, தில்லைநாயகி (கனடா), காலஞ்சென்ற சிவபாலன் (கனடா), சிவநாயகி, அருள்நாயகி, கருணாகரன் (பிரித்தானியா), காளிதாசன் (பிரித்தானியா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனைகள் 21-01-2025 செவ்வாய்க்கிழமை காலை 9:00 மணியளவில் நுணாவில் மேற்கு சாவகச்சேரியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சாவகச்சேரி தென்னிந்திய திருச்சபை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

முகவரி:-

யாழ் வீதி 1ஆம் ஒழுங்கை (நுணாவில் பொது நூலகம் முன்பாக), நுணாவில் மேற்கு, சாவகச்சேரி.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/01/2025 05:00)