திருமதி. பத்மநாதன் கமலாதேவி

பத்மநாதன் கமலாதேவி

மறைவு: 26 பெப்ரவரி 2026

யாழ். ஆவரங்கால் மேற்கு , வன்னியசிங்கம் வீதியை பிறப்பிடமாகவும்  மார்க்கண்டு  வீதி முழங்காவிலை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி. பத்மநாதன் கமலாதேவி அவர்கள் 26-02-2026 வியாழக்கிழமை அன்று இறையடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி - நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

சிறுப்பிட்டியைச் சேர்ந்த பத்மநாதன் (பாலு) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயசுதா (கனடா), சர்மிளா (இலங்கை) , செந்தீஸ் (கனடா), சதீஸ் (கனடா) , ஜனு (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தேவசகாயம் (டும்மா) , சிறீகாந்தன், நிஷா, சுவர்ணா, ஜெனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பாலசுப்பிரமணியம் (பாலு), தெய்வேந்திரம் (ராசன்), காலஞ்சென்ற தவமணிதேவி, சகுந்தலாதேவி (தேவி), ரோகிணி, திரிபுரவதனி (வதனி) , காலஞ்சென்ற துரைராச்சிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சற்குணதேவி, ரூபி, குலேந்திரம், நடராஜா, ராஜா, றஞ்சி, ராணி, வசந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 

அன்னாரது இறுதிக் கிரியைகள் 02-03-2026 திங்கட்கிழமை  அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெறும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/02/2026 15:40)