திருமதி. பத்மாதேவி செல்வரத்தினம்
(ஓய்வுபெற்ற ஆசிரியை - வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை)
மறைவு: 26 செப்டம்பர் 2026
மலேசியா - சிரம்பானைப் பிறப்பிடமாகவும், அனலைதீவு, மற்றும் இல- 58, பிறவுண் வீதி, நீராவியடி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பத்மாதேவி செல்வரத்தினம் அவர்கள் 26-09-2026 சனிக்கிழமை அன்று மாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பெருமாள் - நாகம்மா தம்பதியினரின் அன்புக்குரிய மகளும், காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வரத்தினம் (தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், நடராஜா, கனகசபை, பொன்னம்பலம், காந்திநேசன், பூரணதேவி, விமலாதேவி ஆகியோரின் ஆசைத் தங்கையும்,
கல்யாணி (இலண்டன்), ஸ்ரீஸ்கந்தன் (இலண்டன்), காஞ்சனா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கண்ணன், அக்னேக்ஷ்கா, செந்தூரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஸ்தூரி, மயூரி, ஹெலனா தேவி, குணா, ரமணா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-09-2026 செவ்வாய்க்கிழமை, அன்று காலை 6:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, காலை 8:00 மணியளவிலா திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
