Mr. Pathmanathan Balasubramaniyam

(ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர் - சுகாதார அமைச்சு, கிழக்கு மாகாண சபை)

Pathmanathan Balasubramaniyam

Date of Birth: 10 December 1939 - Deceased: 31 May 2026

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. பத்மநாதன் பாலசுப்பிரமணியம் அவர்கள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

மணிமேகலை (ஓய்வுபெற்ற ஆசிரியை), மேகவண்ணன் (நிர்வாக உத்தியோகத்தர் பிரதேச செயலகம், பருத்தித்துறை), மலைமகள் (தாதி-கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நடேசலிங்கம் (Atlas Enterprises), ஜெகதீஸ்வரி (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் நகரசபை வல்வெட்டித்துறை), சுபாஸ்கரன் (கனடா) ஆகியோரின் மாமனாரும்,

பரிபூரணன், அருண்மொழி. சாரங்கன், சுருதி, பவித்ரன், மயூரதன், மதுசூதனன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-06-2026 புதன்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் (இல.137/3, கதிர்காமத்தம்பி வீதி, உப்புவெளி - செல்வநாயகபுர பாடசாலை சந்திக்கு) அருகாமையில் நடைபெற்று, மாலை 04.00 மணியளவில் திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/06/2026 00:00)