திருமதி. பத்மாசனி சர்வானந்தன்
தோற்றம்: 17 ஆகஸ்ட் 1937 - மறைவு: 07 ஆகஸ்ட் 2025
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இலண்டன் - Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்மாசனி சர்வானந்தன் அவர்கள் கடந்த 07-08-2025 அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், ஏழாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - அமுதம் தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,
உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - சுந்தரம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சர்வானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
இங்கிலாந்தைச் சேர்ந்த மணிவண்ணன், உமாவண்ணன், அரவிந்தன், கனடாவைச் சேர்ந்த புஷ்பராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இந்திராணி, புஷ்பராணி, சத்தியபாமா, உமாகாந்தன், மாலினி மற்றும் இலட்சுமிகாந்தன், சந்திரவதனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பவானி, நிருபா, காலஞ்சென்ற மதுரா, அகிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr துளசி, ஜனகன், பிரசாத், பிருந்தன், அனுஷன், ஆகிரி, சகாரன், சகானா ஆகியோரின் அன்புப்பாட்டியாரும்,
காலஞ்சென்றவர்களான இராசதுரை, ராமதாஸ், கிருஷ்ணானந்தன், மற்றும் சிவராஜா, புஷ்பதேவி, தேவகி, கவீந்திரதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான திரவியம், பரமானந்தன், விவேகானந்தன், இராசானந்தன் (கனடா) மற்றும் கிருஷ்ணானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-08-2025 சனிக்கிழமை அன்று மாலை 16:00 - 19:00 மணி வரை Om Funeral Care Services (1-3 Beattyville Gardens, Ilford, IG6 1JN) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 19-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் Jack Carter Pavilion (Oakfield Playing Fields BarkingSide, Ilford IG6 2JL UK) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 14:00 மணியளவில் திருவுடல் Forest Park Cemetery & Crematorium (Forest Road, Hainault, Ilford IG6 3HP UK) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
