Mrs. Pathmasothy Jeyarasa

Pathmasothy Jeyarasa

Date of Birth: 14 October 1954 - Deceased: 17 July 2026

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பத்மசோதி ஜெயராசா அவர்கள் 17-07-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி - விஜயலட்சுமி தம்பதியினரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை - லூசியா தம்பதியினரின் மருமகளும்,

ஜெயராசா (பிரான்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

பாலகிருஸ்ணா (கிருஸ்ணா பந்தல்), சிவகரன், நிஷாந்தினி, லக்சன் (ஆசிரியர் - முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஞானரூபி, பிரசாந், சுகன்யா (ஆசிரியை - முல்லைத்தீவு ஆனந்தபுரம் அ.த.க. பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆகீசன், தரணிகா, விபுசாந், ஹர்நிசா, நகோமிகா, மொழியன்பினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லீலாதேவி (பிரான்ஸ்), பாரதிதாசன் (வாதரவத்தை), சண்முகதாசன் (கனடா), தேவதாசன் (நீர்வேலி), மல்லிகாதேவி (சங்குவேலி), சற்குணதாசன் (பிரான்ஸ்), தவதேவி (ஆசிரியை - யாழ். கொக்குவில் மேற்கு சி.சி.த.க பாடசாலை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மரியநாயகம் (நவாலி), சென்றேமன் (கொழும்பு), மேரி இம்மாகுலோட்டா (நவாலி), திருஞானமூர்த்தி (பிரான்ஸ்), றஞ்சினிதேவி (வாதரவத்தை), திருமகள் (கனடா), விக்கினேஸ்வரி (நீர்வேலி), ஜெயகாந்தன் (சங்குவேலி), சுசீலாதேவி (பிரான்ஸ்), சிவசோதிநாதன் (ஓய்வு நிலை ஆசிரியர் இணுவில்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-07-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/07/2026 00:00)