திருமதி. பத்மாவதி சுப்ரமணியம்

பத்மாவதி சுப்ரமணியம்

தோற்றம்: 19 மார்ச் 1936 - மறைவு: 11 மே 2024

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்மாவதி சுப்பிரமணியம் அவர்கள் 11-05-2024 சனிக்கிழமை அன்று சென்னையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தம்பிராசா-நாகரெத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும், சிங்காரம்பிள்ளை-சின்னபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

இந்துமதி, காலஞ்சென்ற செல்வச்சிவம், இளங்கோ, அன்பழகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவாஜி, சுவர்ணலதா, கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஹரி, சங்கீதா, ஆதவன், வெண்ணிலா, முகிலன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான ஞானம்பிகை (ஞானம்), ராஜசிங்கம், துரைரெத்தினம், அரசரெத்தினம் ஆகியோரின் சகோதரியும்,

ஞானசவுந்தரி, ஞானபரமேஸ்வரி, தேவராஜா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் சென்னை பெசன்ட் நகர் இந்து மயானத்தில் இறுதிக்கிரியைகளின் பின் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/05/2024 04:00)