திருமதி. சந்திரசேகரி பத்மாவதி

(முன்னாள் யூனியன் கல்லூரி விஞ்ஞான ஆசிரியை)

சந்திரசேகரி பத்மாவதி

தோற்றம்: 04 நவம்பர் 1938 - மறைவு: 02 நவம்பர் 2024

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், டொரொண்டோ-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்திரசேகரி பத்மாவதி 02-11-2024 சனிக்கிழமை அன்று இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரந்தாமர்-நாகமுத்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா (சண்டிலிப்பாய்)-பொன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

செல்லையா சந்திரசேகரி (முன்னாள் மகாஜனா கல்லூரி ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுமதி, சாந்தி, பாமதி ஆகியோரின் அன்பு தாயாரும்,

பத்மகாந்தன், மோகன், ராமதாஸ் ஆகியோரின் மாமியாரும்,

சங்கர், மயூரன், டக்‌ஷனி, சுதர்சன், சோபிதா, சிமித்தா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

அமரா, சயலா, றியாவின் பூட்டியும்,

Dr.நடராஜா, புவனேஸ்வரி, நகுலேஸ்வரி, மகேஸ்வரி, நீலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-11-2024 புதன்கிழமை அன்று மாலை 5.00-9.00 மணி வரையும், 07-11-2024 வியாழக்கிழமை மதியம் 1.00-4.00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.   

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/11/2024 04:00)