திருமதி பத்மாவதி சர்வேஸ்வரன்
மறைவு: 14 டிசம்பர் 2019
அச்சுவேலி தெற்கு சிவசக்தி கோயிலடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பத்மாவதி சர்வேஸ்வரன் நேற்று முன்தினம் (14.12.2019) சனிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற அருளம்பலம் சர்வேஸ்வரன் (ஆய்வு கூட தொழில்நுட்பவியலாளர்/ MLT) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற செல்லத்துரை - செல்லப்பாக்கியத்தின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அருளம்பலம் - அருந்ததி (உரும்பிராய்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பகீரதி, மற்றும் பாலேந்திரா, சிவகணேசதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அமுதா (விலங்கு புலனாய்வு அதிகாரி, யாழ்ப்பாணம்) அவர்களின் பாசமிகு தாயாரும்,
ஈஸ்வரதாசன் (ஓய்வு பெற்ற ஆண் பரிசாரகர், அச்சுவேலி), ஞானேஸ்வரதாசன், மோகனதாசன் (சுவிஸ்), செல்வரதி (சுவிஸ்) ஆகியோரின் ஆசையம்மாவும்,
பிரபாகரன் (கால்நடை வைத்தியர், சாவகச்சேரி), செல்வராணி (ஓய்வு பெற்ற ஆசிரியர், வவுனியா), சுதேசனா, புஸ்பா (சுவிஸ்), பகீரதன் (சுவிஸ்), சஞ்சீவன் (தாதி உத்தியோகத்தர், போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியும்,
பஞ்சாட்சரநாதன் (ஓய்வு பெற்ற ஆசிரியர்), காலஞ்சென்ற விமலேஸ்வரி (உரும்பிராய்), சண்முகநாதன் (கனடா), யோகநாதன் (ஓய்வு பெற்ற உதவிக் கல்வி பணிப்பாளர், வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லகஷன் (யாழ் இந்துக் கல்லூரி), லாஷினி (வேம்படி மகளிர் கல்லூரி), பிரகீஷன் (யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை), பகீரதன், திவாரதன், சௌமிதா, கம்சிதா, சயந்தனா, சபாந்தினி, அனுசன் (சுவிஸ்), சிந்துஜன் (சுவிஸ்), கமன்ஜா (சுவிஸ்), பகீஷன் (சுவிஸ்), ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (16.12.2019) திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக நண்பகல் 12.00 மணியளவில் முழக்கன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
www.tamilthakaval.org
