Srimathi. Pathmawathy Srinivasa Sharma

Pathmawathy Srinivasa Sharma

Date of Birth: 02 January 1941 - Deceased: 19 October 2024

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் மயிலணி ஜெட் மோர்ட்டர்ஸ் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட ஶ்ரீமதி. பத்மாவதி ஸ்ரீநிவாச சர்மா அவர்கள் 19-10-2024 சனிக்கிழமை அன்று மாலை 5.00 மணியளவில் சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மங்களேஸ்வரக் குருக்கள் (காரைநகர் ஈழத்து சிதம்பர ஆலய முன்னால் பிரதம குரு)-புவனேஸ்வரி தம்பதியினரின் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான கார்த்திகேச ஐயர்-பொன்னம்மா தம்பதியினரின் மருமகளும்,

ஸ்ரீனிவாச சர்மா (முன்னாள் உதவிப்பிராந்திய முகாமையாளர்-மக்கள் வங்கி) அவர்களது அன்பு மனைவியும்,

சாந்நினி (அபிவிருத்தி உத்தியோகத்தர் வலி தெற்கு பிரதேச சபை), ஸ்ரீகாந்தன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுரேந்திரன் (புகையிரத நிலைய அத்தியட்சகர்- யாழ் புகையிரத நிலையம்) , ஹம்சினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஸ்ரீகுருபிரசாத், ஹரிபிரசாத், ஸ்ரீமதுஜா, ஜஸ்வந்த் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-10-2024 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/10/2024 04:00)