திருமதி. பத்மினி சுதந்திரசோதி
தோற்றம்: 15 ஏப்ரல் 1954 - மறைவு: 20 ஏப்ரல் 2026
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா - இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பத்மினி சுதந்திரசோதி அவர்கள் 20-04-2026 திங்கட்கிழமை அன்று இறையடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி (Accountant) - புஷ்பராசமணி (பொற்கொடி) தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் - சின்னமணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுதந்திரசோதி அவர்களின் அன்பு மனைவியும்,
சோனியா (இலண்டன்), ஹரன் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லினு, ரஷ்மி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விஹான், ரோஷான், இமாயா ஆகியோரின் அப்பம்மாவும்,
ரஞ்சனி, ரவீந்திரன், ராஜேந்திரன், மகேந்திரன், சுரேந்திரன், உஷாயினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்மபாலன், தமிழ்த்தாய், காலஞ்சென்றவர்களான கருணாகரன், நடராசா, தர்மசிவநாயகி, திருமணித்தேவி, வள்ளி நாயகமணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1:00 - 3:00 மணி வரை Asian Funeral Care (66/67, Monarch Parade, London Road, Mitcham, CR4 3HB UK) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 27-04-2026 திங்ட்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் Tooting & Mitcham Community Sports Club (Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF, UK) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:30 மணியளவில் South London Crematorium (Rowan Rd, London SW16 5JG, UK) இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
ஹரன் (மகன்):- +44 788 872 5310
சோனியா (மகள்):- +44 774 563 2754
www.tamilthakaval.org
