திரு. போல் சத்தியநேசன்
(Ex.Councillor, Newham, London)
தோற்றம்: 17 ஜூன் 1960 - மறைவு: 05 ஜூலை 2024
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Eastham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. போல் சத்தியநேசன் துரைசாமி அவர்கள் 05-07-2024 வெள்ளிக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிறிஸ்டியன் டேவிட் துரைசாமி-அகில் துரைசாமி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சுகிர்தம் இரட்ணநாயகம் அவர்களின் பாசமிகு பெறாமகனும்,
சாமுவேல் காருண்யநேசன், அன்ரு திவ்வியநேசன், டானியல் ஜெபநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இந்துமதி, பிரமிளா, கிறிஸ்டினா(ஜெனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நயோமி, ஜெரமி, ஜென்சன், ஜோஷுவா, ஜோன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் The Willows Forest Rd, London IG6 3SL, United Kingdom எனும் முகவரியில் 13-07-2024 சனிக்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 17-07-2024 புதன்கிழமை அன்று St Paul’s Church Burges Rd., London E6 2EU, United Kingdom எனும் முகவரியில் முற்பகல் 10.00 மணியளவில் நல்லடக்க ஆராதனைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் Manor Park Cemetery & Crematorium Sebert Rd, London E7 0NP, United Kingdom முகவரியில் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும். தொடர்ந்து பிற்பகல் 3.00 மணியளவில் Swaminarayan Sports World Blake Hall Rd, London E11 2QW, United Kingdom நடைபெறும் மதியபோசண நிகழ்வும் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
