திரு. போல்ராஜ் சொர்ணநேசன்

போல்ராஜ் சொர்ணநேசன்

தோற்றம்: 15 ஜனவரி 1961 - மறைவு: 10 மார்ச் 2025

புத்தளம் - முந்தலைப் பிறப்பிடமாகவும், ஏக்கலை ஜா-எலயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. போல்ராஜ் சொர்ணநேசன் அவர்கள் 10-03-2025 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற GT - கமலம் தம்பதியினரின் புதல்வனும், 

ஜெயந்தி சுபத்ரா அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதீப், டிரோஷினி (வீரகேசரி), செலோமி ( ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிருபன், ஜூலி, சேம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜேடன், ஜோவின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-03-2025 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10:00 மணி முதல் கந்தானை Modern Florist இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-03-2025 புதன்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் நல்லடக்க ஆராதனைகள் நடைபெற்று, புகழுடல் கப்புவத்த ஜா-எல பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

முகவரி:-

No-95, Heart Land, Zones III,

Millennium City, Ekala.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/03/2025 04:00)