Mrs. Pavalamalar Theepan

(ஆசிரியை - யாழ். ஊரெழு கணேசா வித்தியாசாலை)

Pavalamalar Theepan

Date of Birth: 03 April 1977 - Deceased: 01 December 2025

யாழ். திக்கம்புரை வயாவிளானைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தீபன் பவளமலர் அவர்கள் 01-12-2025 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர் - இலட்சுமி தம்பதியினரின் இளைய புத்திரியும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு - புஸ்பராணி தம்பதியினரின் மருமகளும், 

தீபன் (ஆசிரியர் - யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,

லிதனின் (மாணவன்- யாழ். கரந்தை இராமப்பிள்ளை வித்தியாலயம்) அன்புத் தாயாரும்,

கனகராணி, நாகேஸ்வரி, தர்மலிங்கம், யுதானந்தசிவம், குகராசன், யோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான துரைராசா, சுந்தரலிங்கம் மற்றும் லிங்கேஸ்வரி, சந்திரராஜினி (அபிவிருத்தி உத்தியோகத்தர்- மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்), உதயராசா, ரூபன், ரூபி (ஆசிரியை - சங்கானை சிவப்பிரகாசர் இந்து ஆரம்பப் பாடசாலை) ஆகியோரின் மைத்துனியும்,

லேராஜி (அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம், காரைநகர்), ரமேஸ் (ஆசிரியர் - யாழ். பண்டத்தரிப்பு ஜசிந்தா றோ.க.த.க. பாடசாலை) ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-12-2025 வெள்ளிக்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் கோப்பாய் வடக்கில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் உரும்பிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/12/2025 00:00)