Mrs. Pavalamma Kanagasabapathi
Deceased: 02 July 2026
யாழ். நல்லூர் அரச வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பவளம்மா கனகசபாபதி அவர்கள் 02-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,
நந்தகுமார் (இலண்டன்), சிவக்குமார் (சிவம்), சுகுமார் (சுகு), பிரேமகுமார் (பிரேம்), மஞ்சுளா (மஞ்சு), ஜெயக்குமார் (ஜெயா), பகீரதி (பகி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜமுனா, இமெல்டா, கிருஷ்ணகுமார், சங்கீதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதுரங்கா, தர்மினி, திவ்யன், யாமினி, பிரளவன், விதுஷா, ஜெயனி ஆகியோரின் பேத்தியாரும்,
ஆரன், மாறன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-07-2026 சனிக்கிழமை அன்று மாலை 5.00 - 9.00 மணி வரையும், 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6.00 - 8.00 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 8.30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
