திருமதி. பவளராணி ஜெயானந்தா

பவளராணி ஜெயானந்தா

தோற்றம்: 03 டிசம்பர் 1964 - மறைவு: 07 ஜூலை 2026

யாழ். பராளாய் வீதி சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பவளராணி ஜெயானந்தா அவர்கள் 07-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி, மரகதவல்லி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,

சண்டிலிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பத்மநாதன், பராசக்தி (நெசவு ஆசிரியை) தம்பதிகளின் அருமை மருமகளும்,

ஜெயானந்தா (France) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

நிவேதிகா (UK), சாயினி (Colombo) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,

காலஞ்சென்ற செல்வராணி அவர்களின் ஆசைத் தங்கையும்,

செல்வராஜா (UK), ஜெயக்குமார் (Germany) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரேமளா (Germany) அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

நிவித்தா - தர்சன் (Swiss), நிருசங்கர், ஜனார்த்தனன் (Germany) ஆகியோரின் நேசமிகு பெரியம்மாவும்,

அடீஸ்ஜெய், ஆலியாமிலா (Swiss) ஆகியோரின் பேரன்பு மிக்க பாட்டியும் ஆவார்.

திருமதி பவளராணி ஜெயானந்தா அவர்களின் பூதவுடல் கொழும்பு கல்கிசையில் உள்ள மஹிந்த மலர்ச்சாலையில்  வரும் 12-07-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணியளவில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மதியம் 1:00 மணியளவில் சமயச்சடங்குகள் நடைபெற்று மாலை 3:00 மணிக்கு கல்கிசை இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/07/2026 02:24)