திரு. பேரம்பலம் கந்தசாமி

(முன்னாள் கிராமோதய சபைத் தலைவர், சமாதான நீதவான்)

பேரம்பலம் கந்தசாமி

தோற்றம்: 18 நவம்பர் 1941 - மறைவு: 03 ஜூலை 2024

வவுனியா நெடுங்கேணி பகுதி ஊஞ்சால்கட்டியைப் பிறப்பிடமாகவும், சாஸ்திரி கூளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பேரம்பலம் கந்தசாமி அவர்கள் 03-07-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம்-பூரணம் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சிவனடியார்-பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

றதிதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுகிதா (கனடா), செந்தூரன் (கனடா), செந்திலன், காலஞ்சென்ற மயூரன், அமிர்தினி (துர்கா-கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி ஆசிரியை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயசீலன் (கனடா), டினோஜா (கனடா), கலைவாணி, அமுதன் (செலான் வங்கி-கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கார்த்திகேயன், நிலவன், கனிஸ்கா, அனுஜ், நிலக்ஸன், டன்னியஶ்ரீ ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, கனகையா, நல்லம்மா மற்றும் தவமணி, சிங்கராஜா (ராஜா), சோமசுந்தரம் (விக்கினம்), அமிர்தலிங்கம் (ஐயா), சிவனந்தாராஜ் (கே. பி. சிவா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வல்லவான்தேவி, காலஞ்சென்றவர்களான குகநேசபாலன், பரிமளாதேவி மற்றும் சரோஜினிதேவி, சந்திராதேவி, சிவபாலன், விமலாதேவி, உதயபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சிவசிதம்பரம், ராஜலட்சுமி (ஈஸ்வரி), உதயலட்சுமி (செந்துரு), சரோஜினிதேவி (கிளி), புஷ்பலதா (லதா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான குலசிங்கம், தியாகராஜா மற்றும் அமுதலிங்கம், சிவசேகரம், சிவா ஆகியோரின் அன்பு சகலனும்,

கமலாதேவி, வசந்தி, ஜமுனா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் வவுனியா சாஸ்திரி கூளாங்குளத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் நெடுங்கேணி உள்ள இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.30 மணியளவில் ஊஞ்சால்கட்டி குடும்ப மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/07/2024 04:00)