Mr. Perinbarajah Anojan

(பொறியியலாளர்)

Perinbarajah Anojan

Date of Birth: 22 February 1987 - Deceased: 07 October 2026

அம்பாறை - கல்முனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பேரின்பராஜா அனோஜன் அவர்கள் 07-10-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பேரின்பராஜா (சிரேஷ்ட சட்டத்தரணி) - அன்னபூரணி (ஓய்வுநிலை அதிபர்) தம்பதியினரின் அன்பு மகனும்,

ஹோசியா (ஊடகவியலாளர், முன்னாள் தமிழ்.எப்.எம் பணிப்பாளர்) அவர்களின் கணவரும்,

ஆராதனாவின் அன்பு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-10-2026 வெள்ளிக்கிழமை காலை 9:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்சாலையிலும், 10-10-2026 சனிக்கிழமை காலை முதல் அன்னாரது கல்முனை இல்லத்திலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 11-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் கல்முனையில் இறுதிக்கிரியைகள் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

ஹோஷியா (மனைவி):- +94 77 393 7397

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/10/2026 00:00)