Mr. Periyasamy Sinnaiya

(சின்னையா அண்ட் சன்ஸ் உரிமையாளர், இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பரிபாலன சபை தலைவர்)

Periyasamy Sinnaiya

Date of Birth: 01 November 1942 - Deceased: 20 June 2026

இரத்தினபுர - இறக்குவானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பெரியசாமி சின்னையா அவர்கள் 20-06-2026 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பெரியசாமி - பெத்தம்பாள் தம்பதியினரின் அன்பு மகனும்,

சின்னம்மா அவர்களின் அன்புக்கணவரும்,

ஈஸ்வரி (ஆசிரியை- சாந்த கிளயார் மகளீர் கல்லூரி, கொழும்பு 06), கண்ணன் (சின்னையா அண்ட் சன்ஸ்), காலஞ்சென்ற அன்புராணி (எழுதுவினைஞர்), அமுதா (ஆசிரியை- ஹிதல்லன த.வி, இரத்தினபுரி), விமலராஜ் (சின்னையா அண்ட் சன்ஸ்), விஸ்வநாதன் (ஷாலினி குரோசரி, கொட்டகல) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

வே.ஞானகுமார் (GK ஜுவல் சிட்டி வெள்ளவத்தை), இரா.விஸ்வநாதன் (மோகன் கமினிகேஷன், இறக்குவானை), ம.சுதர்சன் (ஆசிரியர்- சுமணபாலிகா தேசிய பாடசாலை இரத்தினபுரி), சசிகலா, பிரியதர்ஷனி (ஆசிரியை- டி.எஸ் சேனநாயக்க கல்லூரி கொழும்பு. 07), ஷாலினி (DKP நிறுவனம், ஹற்றன்) ஆகியோரின் மாமனாரும்,

அகிலேஸ் (இலங்கை சுங்கம்), சாருகேஸ், நமீதா, பவனிக்கா, மோகாஷ், பிரமிதா, சந்தியா, ருதிகா, விஷாலினி, வினய், அஸ்வின் ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 23-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மதியம் 1.30 மணியளவில் திருவுடல் பெல்மதுள்ளை மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/06/2026 00:00)