Mr. Periyasamypillai Selvarajah
(அருண் டெக்ஸ்டைல்ஸ் - மடிபாக்கம், சென்னை-91)
Deceased: 26 April 2025
இந்தியா - திருச்சி மாவட்டம் மணியம்பட்டி கிராமம் காலஞ்சென்றவர்களான பெரியசாமிபிள்ளை - தமிழரசி அம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், வடக்கு சிறுபத்தூர் கிராமம் காலஞ்சென்ற பெரியசாமிபிள்ளை (பழனி ஸ்டோர்ஸ் - பட்டிகாமம், இலங்கை) - சரஸ்வதி அம்மாள் தம்பதியினரின் மருமகனும், சந்திரதேவி அவர்களின் அன்புக் கணவருமான திரு. செல்வராஜா அவர்கள் 26-04-2025 சனிக்கிழமை அன்று காலை 6:30 மணியளவில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், அருண் பிரசாத், ஆர்த்தி நிவாசினி (ஆர்த்திகா) ஆகியோரின் தகப்னாரும்,
கோபிநாத்தின் மாமனாரும்,
சேருகுடி கிராமம் ரத்தினம் பிள்ளை (கல்பனா சாரீஸ் - உறையூர்) - பரமேஸ்வரி ஆகியோரின் சம்பந்தியும்,
சப்பாணி (சுந்தர் நகர், திருச்சி-21), காலஞ்சென்ற மாரிமுத்து (சுந்தர் நகர், திருச்சி-21), தேவராஜ் (கல்யாணி டெக்ஸ்டைல்ஸ் - பொகந்தலாவ), கல்யாணி ஆகியோரின் சகோதரரும்,
செல்ராஜாவின் (குலோத் சென்டர் - கொழும்பு 11) மைத்துனரும்,
மகேந்திரனின் மாப்பிள்ளையும்,
வினித், விதூசன் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-04-2025 திங்கட்கிழமை காலை அன்னாரது திருச்சி இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஓயாமாரி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
