Mrs Perumainar Kamalam
Date of Birth: 22 November 1930 - Deceased: 11 April 2020
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பெருமையினார் கமலம் அவர்கள் 11-04-2020 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பெருமையினார் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நவரத்தினசிங்கம், மனோகரன்(மனோ- லண்டன்), மோகனதாஸ்(ராசன்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மந்தாயினி, சசிரேகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பார்வதிப்பிள்ளை, கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மருதையினார், பத்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான பரமானந்தம், மனோன்மணி மற்றும் சதாசிவம்(லண்டன்), காலஞ்சென்ற கமலாம்பிகை(பாலச்சந்திரன்), விஜயலட்சுமி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
வகிசன், யாசகி, கொன்சிகா, டாலியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
www.tamilthakaval.org
