திருமதி. பெருமாள் (பத்தர்) செல்லம்மா
தோற்றம்: 30 நவம்பர் 1943 - மறைவு: 13 ஆகஸ்ட் 2025
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இல-114/1, சிவப்பிரகாசம் வீதி, வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பெருமாள் செல்லம்மா அவர்கள் 13-08-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார்,காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் - ஸ்தபதி பார்வதி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை (பத்தர்) - மாரிமுத்தாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
பெருமாள் பத்தர் அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வம் (இலண்டன்), சிவனேசன், சாந்தி, குமரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கோமதி, திலகலட்சுமி, சுதாகரன், தீபிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி ஆச்சாரி, இராமலிங்கம் ஆச்சாரி, தெட்சணாமூர்த்தி ஆச்சாரி, மற்றும் அருணாசலம் ஆச்சாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெருஷன், ஜென்ற், நதீசன், நஜீகா, நிவாஷன், நிலக்ஷன், கேஜிகன், சங்கரி, கர்சிகன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-08-2025 வியாழக்கிழமை அன்று சிவப்பிரகாசம் வீதி, வண்ணார்பண்ணை இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
