Mr Perumal Marimutthu

(PMM Transport - உரிமையாளர்)

Perumal Marimutthu

Date of Birth: 27 December 1948 - Deceased: 17 June 2024

இந்தியா-வேலூர் மாவட்டம் கருகம்புத்துரை பூர்வீகமாகவும், மஸ்கெலியாவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பெருமாள் மாரிமுத்து அவர்கள் 17-06-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பெருமாள்-தனபாக்கியம் தம்பதியினரின் புதல்வனும், 

காலஞ்சென்ற கண்ணியம்மாள் அவர்களின் அன்புக் கணவரும்,

தியாகராஜா (மாரிஸ் டிம்பர்), சுப்பிரமணியம் (மாரிஸ் ஹாட்வெயார்), புவனேஸ்வரன் (மாரி ஸ்டோர்ஸ் - PMM Transport ), பாக்யராஜ், சர்மா, உமா, ஜாலினி (பிரான்ஸ்), சபானா, ஜெஸ்மின் (Tea Leaf Vision) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரூபி, பத்மேஷ்வரி, மோஹனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மதுர்ஷி -பானுஜன் (லண்டன்), சஜித்ரன், அக்‌ஷிதா, கௌஷால்-ஆதித்யா, கவின்தரணி, ரித்திஷ் மஹத், கபிலேஷ், கபிஷா, பிரணீஷா ஆகியோரின் அன்பு தாத்தாவும்,

திருவேங்கடம் குடும்பம் (மஸ்கெலியா), துரைசாமி குடும்பம் (Lanka Transport-பதுளை), கோவிந்தன் குடும்பம் (Devi Gold House - காலி) ஆகியோரின் சம்பந்தியும்,

தவகுமார் (அஸ்வினி ஜீவலர்ஸ்), வேலகுமார், கிருஷ்ணகுமார் (அஸ்வினி ஜீவலர்ஸ்), S.ரமேஷ்குமாா் (Express Newspapers Pvt. Ltd), V.சுதர்ஸ்ணன் (Tea Leaf Vision), பிரபாகரன் (பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 19-06-2024 புதன்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் நோர்வூட் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:- 

இல-101, சாமிமலை வீதி,

மஸ்கெலியா.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/06/2024 04:00)