திரு. பெருமாள் பிள்ளை சந்திரகுமார்
(BEST ONE GROCERS - DEHIWELA)
தோற்றம்: 05 ஜனவரி 1959 - மறைவு: 18 ஏப்ரல் 2026
இந்தியா - திருச்சி மாவட்டம் இலுப்பையூர் கிராமம், கொழும்பை சேர்ந்த திரு. பெருமாள் பிள்ளை சந்திரகுமார் அவர்கள் 18-04-2026 சனிக்கிழமை மாலை கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. ரா.பெருமாள் பிள்ளை (புசல்லாவை Sri Lanka Stores) - கமலம் தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்ற திரு.வை.அரவாண்டி பிள்ளை (Jayanthi Trade Centre - Old Moor Street) - நலமுடன் சரஸ்வதி தம்பதியினரின் மருமகனும்,
நளினி அவர்களின் அன்புக் கணவரும்,
குகதீப் (Best One Trading Company (PVT) LTD), சௌதாம்பிகை (Attorney at-Law) ஆகியோரின் அன்பு தந்தையும்,
அரவிந்தன், கனிஷ்கா ஆகியோரின் மாமனாரும்,
சேகர், சௌந்தரராஜன், ராஜசேகர், உதயசூரியன், ரவீந்திரன், கோமாதேவி ஆகியோரின் அன்பு சகோதரரும்,
ஜெயசீலனின் மைத்துனரும்,
கீதா, சாவித்திரி, சுசித்ரா ஆகியோரின் கொழுந்தனாரும்,
பாஸ்கரனின் மாப்பிள்ளையும்,
சிதம்பரம் (இந்தியா), மாரியாப்பிள்ளை (கலஹா), தியாகராஜா (கண்டி) ஆகியோரின் சகலையும்,
மகேஸ்வரி, ஜெயந்தி, கீதா ஆகியோரின் மைத்துனரும்,
சு.பாலசுப்பிரமணியம் - சீதா, நோர்வுட் சண்முகநாதன் - சுசீலாதேவி ஆகியோரின் சம்பந்தியும்,
ஆதிரையின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 20-04-2026 திங்கட்கிழமை காலை 7.00 மணி முதல் பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.05 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
