திருமதி. பெருமாயி அம்மாள்
தோற்றம்: 12 ஜூன் 1941 - மறைவு: 14 செப்டம்பர் 2024
கேகாலை-தெரணியகலையைப் பிறப்பிடமாகவும், அளுத்மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பெருமாயி அம்மாள் அவர்கள் 14-09-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முனுசாமி-பாஞ்சாலி அம்மாள் தம்பதியினரின் மகளும்,
சின்னசாமி-வள்ளியம்மாள் தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற சின்னசாமி ராமசாமி ராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜமணி, ராஜபதி, ராஜபூபதி, ராஜமாணிக்கம், தியாகராஜா ஆகியோரின் அன்புத்தாயாரும்,
விஜயகுமார், ஜெயந்தி, தேன்மொழியாள், புஷ்பராணி, நித்தியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரமேஷ்குமார், உதயதர்ஷனி, ஷரண், திரிஷா, யாழினி, வினோதினி, விணுக்ஸன், பிரஜன், தன்ஷிகா, பிரஜேஷ், ரக்ஷிகா ஆகியோரின் அன்பு பாட்டியும்,
திவ்னா, தீப்ஷிகா, தஷ்வின் ஆகியோரின் கொள்ளுப்பாட்டியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 15-09-2024 ஞாயிற்றுக்கிழமை இல-07. சென். ஜீட் லேன், கொழும்பு-15 இல் உள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 16-09-2024 திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் மாதம்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
