Mr. Pethurupillai Pakkiyanathan
Deceased: 05 May 2026
யாழ். நெடுந்தீவு 13ம் வட்டாரம் செபநாயகபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பேதுருபிள்ளை பாக்கியநாதன் அவர்கள் 05-05-2026 செவ்வாய்க்கிழமை காலை இறைபதம் அடைந்தார்.
அன்னார், அமல உற்பவம் அவர்களின் அன்புக் கணவரும்,
அன்ரன் ஜெகுமார், வசந்தசகாயராணி (முன்பள்ளி ஒருங்கிணைப்பாளர்-நெடுந்தீவு), காலஞ்சென்ற அமல கொலஸ்டிகா, அன்ரன் அமலதாஸ் (சமுர்த்தி உத்தியோகத்தர்-நெடுந்தீவு), அன்ரன் யேசுதாஸ் (குருமட அதிபர் - அமலமரித்தியாகிகள் சபை), சகாய கில்டா, அன்ரனி கிறிஸ்ரியன் (யாழ் பத்திரிசியார் கல்லூரி - ஆசிரியர்), சகாயமெற்றில்டா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-05-2026 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை யாழ் ஜெட்வின் ஹொட்டல் முன்பாகவுள்ள பப்பாச்சி அந்தியகால சேவை நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 2.30 மணியளவில் நெடுந்தீவில் உள்ள அன்னாரின் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, 06-05-2026 புதன்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் நெடுந்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் நல்லடக்க ஆராதனைகள் நடைபெற்று, சரீரம் நெடுந்தீவு மத்தி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
