திரு பிள்ளைநாயகம் வரதராஜா
(ஓய்வு பெற்ற தேசிய சேமிப்புவங்கி முகாமையாளர், பிரபல தபேலா கலைஞர், சாரங்கா இசைக்குழு ஸ்தாபகர்)
தோற்றம்: 03 மார்ச் 1954 - மறைவு: 15 அக்டோபர் 2026
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு பிள்ளைநாயகம் வரதராஜா அவர்கள் 15-10-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிள்ளைநாயகம் - சின்னம்மா தம்பதிகளின் இளைய பாசமிகு புதல்வனும், காலஞ்சென்றவர்களான சோக சோபிதா சொர்ண கவிக்குயில் இரத்தினம் - செல்வமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரஞ்சினிதேவி (ஓய்வுபெற்ற கலைமகள் முன் பள்ளி ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,
பானுதீபன்(சாரங்காஒக்டபாட கலைஞர்), தேனுகா(ஆசிரியை - யாழ் சென்.ஜேம்ஸ் மகா வித்தியாலயம்), சுவர்ணகீதன் (சானு சாரங்கா இசைக் குழு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திரஜோதி, உதயன் மாக்ஸ் (கஸ்ரோ- இலங்கை மின்சார சபை வேலணை), சகுந்தலா, சாவித்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இலட்சுமி, கலாபூசனம் திருநாவுக்கரசு (ஓய்வு பெற்ற நகரசபை பிரதமு லிகிதர், நாவலப்பிட்டி), தவமணி, காந்தாமணி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற வைகுந்தவாசன் (ஓய்வு பெற்ற பனை அபிவிருத்தி சபைகளஞ்சிய பொறுப்பாளர்), ஜெயமலர், விசுவர் மற்றும் கிறிஸ்ணபிள்ளை, கமிலினிதேவி, வசந்தவாசன் (நோர்வே), வதனவாசன் (ஓய்வுபெற்ற பலநோக்கு கூட்டுறவுச் சங்க சபை மேற்பார்வை உத்தியோகத்தர், சாரங்கா இசைக்குழு இயக்குனர்), இராகினி, கிருஸ்ணமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கானப்பிரியன்,இசைப்பிரியன், கஸ்மிரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-10-2026ம் திகதி வெள்ளிக்கிழமை அன்னாரது இல்லத்தில் மு.ப.1100 மணியளவில் நடைபெற்று பூதவுடல்தகனக்கிரியைகளுக்காக அரியாலை சிந்து பாத்தி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
