Mrs. Piriyatharshini Pakeetharan
Date of Birth: 12 April 1969 - Deceased: 16 June 2026
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவர்”
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும், தோம்புதர் வீதி, ஏறாவூர் 5ம் குறிச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பிரியதர்ஷினி பகீரதன் அவர்கள் 16-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரநாராயணபிள்ளை - புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - தங்கப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
பகீரதன் அவர்களின் அன்பு மனைவியும்,
நிர்தீஸ்வர் அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற மணிவண்ணன் (முன்னாள் பிரதி அதிபர் - மட். சிவானந்தா தேசியக் கல்லூரி), மைதிலி, பகீரதி (இலண்டன்), ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விக்கினேஸ்வரி (முன்னாள் உபபீடாதிபதி - தேசியக் கல்வியியல் கல்லூரி, மட்டக்களப்பு), யோகநாதன், கிருபைராஜா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் வள்ளியம்மை, ராஜரெட்ணம், சீவரெட்ணம், அரியரெட்ணம், செல்வரெட்ணம், விஜயரெட்ணம் மற்றும் மணிமேகலை, அருந்தவம், ஆகியோரின் மருமகளும்,
கருணையம்மா, குணநாயகி, மங்கையற்கரசி ஆகியோரின் பெறாமகளும்,
தமனியன் (வைத்தியர்) அவர்களின் அத்தையும்,
கிரிசாந்தன், யதூரி, கிரிசீகன் ஆகியோரின் சித்தியும்,
ஆர்த்திகா, ஆருதி, அவனீஸ் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
காயத்திரி (ஆசிரியை), திபாஹரி (விரிவுரையாளர்), கோபிநாத் (இலண்டன்), யதுகிரி (இலண்டன்), கஸ்தூரி (வைத்தியர்), சங்கரி (ஆசிரியை), மைத்திரேயி (விரிவுரையாளர்), நரசிம்மன் (வங்கி முகாமையாளர்), வெங்கடரமணன், கமலாதேவி (முன்னாள் தபால் அதிபர்), தயானந்ததேவி (முன்னாள் ஆசிரியை), மகேஸ்வரிதேவி (முன்னாள் நூலக உதவியாளர்), விவேகானந்தராஜா, குகானந்தராஜா (உப தபாலதிபர்), ஸ்ரீமதிதேவி (முன்னாள் ஆசிரியை), ஸ்ரீநேசன் (நாடாளுமன்ற உறுப்பினர்), ஸ்ரீரங்கன் (முன்னாள் அதிபர்), ஸ்ரீகலாதேவி (ஆசிரியை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 18-06-2026 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 03.00 மணியளவில் மட்டக்களப்பு கள்ளியங்காட்டு மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 75 664 4521
+94 76 664 8048
www.tamilthakaval.org
