Mrs. Pithankaniyamma Kanagasabapathy

(பீதாங்கனியம்மா அறக்கட்டளை - போசகர்)

Pithankaniyamma Kanagasabapathy

Date of Birth: 26 August 1949 - Deceased: 02 March 2025

யாழ். தேவன் குறிச்சி இலக்கணாவத்தை உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பீதாங்கனியம்மா கனகசபாபதி அவர்கள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நவரத்தினம் - சின்னத்தங்கம் தம்பதியினரின் ஏகபுத்திரியும், கனகசுந்தரம்  - தங்கமுத்து தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தம்பி, நடனசிகாமணி ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்ற கனகசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெகதீஸ்வரி (ஆசிரியை - தொண்டைமானாறு வீரகத்திபிள்ளை மகா வித்தியாலயம்), காலஞ்சென்ற ரதீஸ்வரி, ஜெயகாந்தன் (எமறல்ட் ஹாட்வெயார் - உடுப்பிட்டி), குணேஸ்வரி (ஆசிரிய ஆலோசகர் வலயக்கல்வி அலுவலகம் - யாழ்ப்பாணம்). ஜெயசீலன்  (ஆசிரியர் -யாழ். மெதடிஸ்ற் பெண்கள் உயர் பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விநாயககுமார், சசிகுமார் (ஆசிரியர் - யாழ். மந்துவில் ஸ்ரீ பார்வதி வித்தியாலயம்), ஈஸ்வரி (சுகந்தி), காலஞ்சென்ற ரகுநாதன், சுகன்யா (அபிவிருத்தி உத்தியோகத்தர் - பருத்தித்துறை) ஆகியோரின் அன்பு மாமியும்,

குமணன் (இலண்டன்), தனுசா (மட்டக்களப்பு சுவாமி விபுலாந்தா அழகியல் கற்கை நிறுவகம்), தசானி, கிருசிகா, சகானா, நிதுக்சிகா (யாழ். உடுப்பிட்டி மகளிர் கல்லூரி - மாணவிகள்), அஸ்விதா (யாழ். வேம்படி  மகளிர் உயர்தரப் பாடசாலை - மாணவி), அஸ்வின், அட்சயன் (யாழ் இந்துக் கல்லூரி), ஜெய்வர்தன் (யாழ். தாமோதரா வித்தியாலயம் - கரணவாய்), ஜெய்ஹாநிகா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

உமாதேவி (இலண்டன்), சசிகலா, (ஆசிரியை -  யாழ். சென் மேரீஸ் வித்தியாலயம்), செல்வகுமார், சிவகுமார், சாந்தகுமாரி (கொழும்பு), ஈஸ்வரகுமார் (இலண்டன்), நளாயினி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-03-2025 திங்கட்கிழமை அன்னாது இல்லத்தில் நண்பகல் 12:00 மணியளவில் நடைபெற்று, புகழுடல் எள்ளங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/03/2025 05:00)