Mrs. Ponnampalam Chinnamma
Deceased: 13 August 2024
யாழ். சுழிபுரத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பொன்னம்பலம் சின்னம்மா அவர்கள் 13-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு-வேலாசி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் மனைவியும்,
கோணேஸ்வரன், சரோஜாதேவி, நற்குணராசா, சிவசுந்தரி, கிருஷ்ணவேணி, சுகந்தினி, குமரகுருபரர் ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனை 14-08-2024 புதன்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியில் அமைந்துள்ள அன்னாரின் மகனின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் நல்லடக்கத்திற்க்காக சாம்பலோடை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
