திரு. பொன்னையா சிவராசரத்தினம் (சிவம்)

(முன்னாள் விவசாய சம்மேளனத் தலைவர்)

பொன்னையா சிவராசரத்தினம் (சிவம்)

தோற்றம்: 16 பெப்ரவரி 1948 - மறைவு: 13 ஜனவரி 2025

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னையா சிவராசரத்தினம் அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா - தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான இளையதம்பி - சின்னத்தங்கச்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கோபிராஜ் அவர்களின் பாசமிகு தந்தையும்,

மோகனவாணி அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சபாரட்ணம், யோகரட்ணம், மனோரஞ்சிதம், தளையசிங்கம் மற்றும் தர்மராஜசிங்கம், இராசரத்தினம், பராசக்தி, ஈஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அக்ஷயா, ஆதிரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-01-2025 வியாழக்கிழமை அன்று நண்பகல் 12.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் பெரியவிளான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/01/2025 05:00)