திரு பொன்னையா செல்வராஜா (P.S)

(Bala Stores - Wellawatta)

பொன்னையா செல்வராஜா (P.S)

தோற்றம்: 28 ஆகஸ்ட் 1944 - மறைவு: 13 பெப்ரவரி 2024

யாழ். அல்வாய் கிழக்கு (அத்தாய்) மாலைச்சந்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னையா செல்வராஜா (பாலா ஸ்டோர்ஸ் - உரிமையாளர்) அவர்கள் 13-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா - சிவக்கொழுந்து தம்பதியினரின் மூத்த மகனும், 

தசநாயகம் (சாந்தம்) அவர்களின் அன்புக் கணவரும்,

செல்வமகள் (செல்வி-கனடா), செல்வநாயகம் (கீதா), செல்வநிதி (நிதி), கலைச்செல்வி (றதி-லண்டன்), றஜீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஶ்ரீகுமார் (கனடா), ஶ்ரீரங்கன், தவஈஸ்வரன், ராஜ்குமார் (லண்டன்), அஞ்சலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரவீன், கவின், நிதுஷிகா, அபிமன்யு, ஜதீசன் ஆகியோரின் பாட்டனாரும்,

காலஞ்சென்றவர்களான தேவராஜா, தவராஜா, தர்மராஜா, கனகம்மா, மகேஸ்வரி மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயபாலன் (அப்பு-சுவிஸ்), ஜெயரா (இந்தியா), கலைமகள் (கலா-ஜேர்மனி), கலைவாணன் (ராசு-சுவிஸ்), கலைச்செல்வன் (கண்ணன்) ஆகியோரன் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அத்தாயிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் 18-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக பூதவுடல் கருகம்பன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/02/2024 05:00)